சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்திய மூர்த்தி பவன் தாக்கப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரிப்பார்கள் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் தெரிவித்தார்.
கோவைக்கு இன்று வந்த அவர், கோவை சரகம் மற்றும் கோவை மாநகரில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது, நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவன் தாக்கப்பட்ட வழக்கு, தாராபுரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் வீடு தாக்கப்பட்ட வழக்கு ஆகியவை சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்றார்.