2004
ஆம் ஆண்டு டிசம்பர் 26இல் சுனாமி பேரழிவில் தமிழகத்தில் ஏராளமானோர் பலியாயினர். சுனாமி ஏற்பட்டு 4 ஆண்டுகள் இன்று நிறைவடைவதையொட்டி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விசைப்படகு உரிமையாளர் சங்கம் மற்றும் வடசென்னை ஐக்கிய பஞ்சாயத்து சபையைச் சேர்ந்த மீனவர் கிராமத்தைச் சார்ந்தவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், ஐக்கிய பஞ்சாயத்து தலைவர் சீமன் சண்முகம் மற்றும் மீனவ தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கடலூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் சுனாமியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டத்திலும் சுனாமிக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்தி, ஏற்றியும், தீபம் ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலூர் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரதோப்பு ஆகிய கடற்கரை கிராமங்களில் சுனாமியால் பலியானவர்களின் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுனாமி நினைவு நாளையொட்டி கடலூரில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் இன்று மவுன ஊர்வலம் நடைபெற்றது.