அ.இ.அ.தி.மு.க. உடன் கூட்டணி உருவாகியுள்ள இச்சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜன் இன்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. உடன் இருந்தார் என்று அ.இ.அ.தி.மு.க. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.விற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவை அவர்கள் உறுதிப்படுத்தியதாக தெரிகிறது.