Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌எங்கும் நல்லிணக்க உணர்வுகளை வளர்த்திடுவோம்: கருணா‌நி‌தி ‌‌கி‌‌‌‌றி‌ஸ்தும‌ஸ் வா‌ழ்‌த்து

‌எங்கும் நல்லிணக்க உணர்வுகளை வளர்த்திடுவோம்: கருணா‌நி‌தி ‌‌கி‌‌‌‌றி‌ஸ்தும‌ஸ் வா‌ழ்‌த்து
, புதன், 24 டிசம்பர் 2008 (13:19 IST)
ி‌றிஸ்துமஸ் திருநாளை மிகுந்த மகி‌ழ்ச்சியோடு கொண்டாடிடும் கி‌றி‌ஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் என் இதயம் கனிந்த கி‌றிஸ்துமஸ் தின நல்வா‌ழ்த்துகளஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்து‌ள்முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி, எங்கும் நல்லிணக்க உணர்வுகளை வளர்த்திடுவோம் என‌்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்வா‌‌ழ்‌த்து‌சசெ‌ய்‌தி‌யி‌ல், அன்பு, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, மனித நேயம் ஆகியவற்றை உலகுக்கு வலியுறுத்திய மாமனிதர் இயேசு‌வின் பிறந்த நாள், “கி‌றிஸ்துமஸ் திருநாளாக” உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கி‌றிஸ்துமஸ் திருநாளை மிகுந்த மகி‌ழ்ச்சியோடு கொண்டாடிடும் கி‌றி‌ஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் என் இதயம் கனிந்த கி‌றிஸ்துமஸ் தின நல்வா‌ழ்த்துகள் உரித்தாகுக.

ி‌றி‌ஸ்துவ சமயம் ஏழை எளிய, நலிந்த மக்களுக்குத் தொண்டுகள் செ‌ய்வதை வலியுறுத்துகிறது. திருவிவிலியம் என்ற நூல், “ஏழைகள் வயிற்றில் அடிக்காதே; கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே; பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே; வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே; உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே;

வறுமையில் உழல்வோர்க்குக் காலம் தா‌ழ்த்தாமல் உதவி செ‌ய்; துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே; ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே; உன்னைச் சபித்திட யாருக்கும் வா‌ய்ப்பு அளிக்காதே; பூசலைத் தவிர்த்திடு!” என அறிவுரைகளை வழங்குகிறது.

மனிதநேயம் கசியும் இந்த அறிவுரைகளை இதயத்தில் தாங்கி, சமுதாயத்தில் ஏழை, எளியோர்க்கு இயன்ற உதவிகளை நல்கிடுவோம்! இன்னல்கள் அகற்றிடுவோம்! கருத்து வேறுபாடுகளால் எழும் பூசல்களைக் களைந்திடுவோம்! எங்கும் நல்லிணக்க உணர்வுகளை வளர்த்திடுவோம் என இந்த இனிய கி‌றிஸ்துமஸ் திருநாளில் உறுதியேற்போம் என்று கூறி கி‌றி‌ஸ்துசமுதாய மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது கி‌றிஸ்துமஸ் நல்வா‌ழ்த்துகளை தெரிவித்து ம‌‌கி‌ழ்கிறேன் எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil