கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 4ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை கால நீதிமன்றம் டிசம்பர் 30 ஆம் தேதி செயல்படுகிறது. அவசரகால மனுவை 29 ஆம் தேதி விடுமுறைகால அதிகாரியிடம் தாக்கல் செய்யலாம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை, விடுமுறை கால நீதிபதிகள் வி. தனபாலன், எம். சத்யநாராயணன் ஆகியோரும், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை, நீதிபதிகள் எஸ். பழனிவேலு, ஆர். சுப்பையா ஆகியோரும் விசாரிப்பார்கள் என்று உயர் நீதிமன்ற செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.