புதுச்சேரியில் நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்ட பிரச்னை தொடர்பாக 2 காவல்துறை உதவி ஆய்வாளர் உள்பட 10 காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஊர்க்காவல் படைவீரர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதன்படி சிக்மா பாதுகாப்பு பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் கணேஷ், வில்லியனூர் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோரும், 8 காவல்துறையினரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஊர்க்காவல் படைவீரர் முரளி, சட்டம்- ஒழுங்கு அலுவலகத்தில் பணியாற்றிய ஊர்க்காவல் படைவீரர் அவில்பட்டு ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.