சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் 3 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்று தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம், தென்னிந்திய மாநிலங்கள் பயன்பெறும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாவட்டத்திலுள்ள திறமையான வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்த பரமசிவம், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29, 30, 31 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் வழகக்கறிஞர்கள் புறக்கணிப்பது என கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது என்றார் பரமசிவம்.