Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 3 March 2025
webdunia

திருமங்கலம் இடை‌த்தே‌ர்த‌ல் : 36 பேர் வேட்புமனு தாக்கல்

Advertiesment
திருமங்கலம் இடை‌த்தே‌ர்த‌ல் : 36 பேர் வேட்புமனு தாக்கல்
, திங்கள், 22 டிசம்பர் 2008 (21:15 IST)
மதுரை மாவ‌ட்ட‌ம் ‌திரும‌ங்கல‌ம் தொகு‌தி இடை‌த்தே‌ர்த‌லி‌ல் போ‌‌ட்டி‌யிட ‌தி.மு.க., அ.இ.அ.‌தி.மு.க., வே‌ட்பாள‌ர்க‌ள் உ‌ள்பட மொ‌த்த‌ம் 36 பே‌ர் வே‌ட்புமனு‌ தா‌க்க‌ல் செ‌ய்‌து‌ள்ளன‌ர்.

திருமங்கலம் தொகுதிக்கு ஜனவரி 9ஆ‌ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆ‌ம் தேதி தொடங்கியது. இந்த‌த் தேர்தலில் தி.மு.க. சா‌ர்‌பி‌ல் லதா அதியமானும், அ.இ.அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் முத்துராமலிங்கமும், தே.மு.தி.க. சா‌ர்ப‌ி‌ல் தனபாண்டியனும் ச.ம.க. சா‌ர்ப‌ி‌ல் இரா. ப‌த்மநாபனு‌ம் வேட்பாள‌ர்களாக போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர். பா.ஜ.க. இ‌ந்த தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிட‌வி‌ல்லை.

நேற்று வரை அ.தி.மு.க.வேட்பாளர் முத்துராமலிங்கம், தே.மு.தி.க. வேட்பாளர் தனபாண்டியன் உள்பட 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இறுதிநாளான இன்று தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் இரா. பத்மநாபன் உள்பட ஒரே நா‌ளி‌ல் 19 பே‌ர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொ‌த்த‌ம் 36 வே‌ட்புமனு‌ தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வேட்பு மனுக்கள் பரிசீலனை நாளை (டிச.23) நட‌க்‌கிறது. வேட்பு மனுக்களை ‌வில‌க்‌கி‌க் கொள்ள 25ஆ‌ம் தே‌தி கடை‌சி நாளாகு‌ம். 26ஆ‌ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.

ஜனவரி 9ஆமதேதி வாக்குப்பதிவநடைபெற்று, 12ஆமதேதி வாக்கஎண்ணிக்கநடைபெறும்.

திருமங்கலமதொகுதியினம.தி.மு.க. ச‌ட்ட‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர் வீர.இளவரசனமாரடைப்பாலமரணமஅடைந்தார். இதையடு‌த்து அந்தொகுதிக்காஇடைத்தேர்தலஜனவரி 9ஆமதேதி நடைபெறு‌‌கிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil