Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ச‌த்‌திய மூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் பெ‌‌ரியா‌ர் திரா‌விட‌ர் கழக‌த்‌தின‌ர்- கா‌ங்‌கிரசா‌ர் மோத‌ல்

Advertiesment
ச‌த்‌திய மூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் பெ‌‌ரியா‌ர் திரா‌விட‌ர் கழக‌த்‌தின‌ர்- கா‌ங்‌கிரசா‌ர் மோத‌ல்
, சனி, 20 டிசம்பர் 2008 (18:00 IST)
இய‌க்குன‌ர் ‌சீமா‌ன், பெ‌‌‌ரியா‌ர் ‌திரா‌விட‌ர் கழக‌த் தலைவ‌ர் கொள‌த்தூ‌ர் ம‌ணி ஆ‌கியோ‌ர் கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டதை க‌ண்டி‌த்தத‌மிழக கா‌ங்‌கி‌ர‌ஸ் தலைமை அலுவலகமான செ‌ன்னை ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் பெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌ர் கழக‌த்‌தின‌ர் இ‌ன்று ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர். அ‌ப்போது கா‌ங்‌கிர‌சாருட‌ன் ஏ‌ற்ப‌ட்ட மோத‌லி‌‌னா‌ல் அ‌‌‌ங்கு பெரு‌ம் பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

ராஜீவ்காந்தி, காங்கிரசாரை விமர்சனம் செய்த இய‌க்குன‌ர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரியார் திரா‌விட‌ர் கழக‌த்தை‌ச் சேர்ந்தவர்கள் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் இ‌ன்று ச‌த்‌திய மூ‌ர்‌த்த‌ி பவ‌ன் முன்பு போராட்டம் நடத்த திரண்டன‌ர். அவர்களை இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். மு‌ன்னெ‌‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கையாக காவ‌ல்துறை‌யின‌ர் ஏராளமாகக் கு‌வி‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்தன‌ர்.

அப்போது திடீரெ‌ன்று கா‌‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோனியா காந்தி, ‌பிரதம‌ர் மன்மோகன் சிங், த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் கே.‌வி.தங்கபாலு ஆகியோரது உருவ பொம்மைகளை பெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌ர் கழக‌த்‌தின‌ர் எ‌ரி‌த்தன‌ர்.

இதைப் பார்த்து ஆவேசம் அடைந்த காங்கிரசார் சில பேர் அங்கு ஓடி வந்து 'உருவ பொம்மை எரிக்க எப்படி அனுமதிக்கலாம்' என்று கூறி காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆவேச‌ம் அடை‌ந்த கா‌ங்‌கிர‌சா‌ர் சிலர் காவ‌ல்துறை‌யினரு‌க்கு எ‌திராக கோஷ‌ம் போ‌ட்டபடியே சாலை ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

அப்போது திடீரென்று காவ‌ல்துறை‌யின‌ர் ‌மீதும் சத்திய மூர்த்தி பவன் மீதும் சரமாரி க‌‌ற்க‌ள் வீசப்பட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து காங்கிரசாரும், பெ‌ரியா‌ர் தி.க.வினரும் மோத‌‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இ‌ந்த மோத‌‌லி‌ல் காங்கிரஸ் மாநகரா‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர் நாகராஜ் காயம் அடைந்தார். இ‌ந்த மோ‌த‌லினா‌ல் சத்திய மூர்த்தி பவன் போர்க்களம் போல் கா‌ட்‌சி அ‌ளி‌த்தது.

இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்த கரா‌த்தே ‌தியாகராஜ‌ன், ஆ‌ர்.தாமோதர‌ன் உ‌ள்பட கா‌ங்‌கிர‌ஸ் ‌நி‌ர்வா‌கி‌க‌ள் ச‌த்‌தியமூ‌ர்‌த்தி பவ‌ன் ‌விரை‌ந்து வ‌ந்து காவ‌‌ல்துறை‌யினருட‌ன் வா‌க்குவாத‌த்தி‌ல் ஈடுப‌ட்டன‌ர். அ‌ப்போது, பெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌ர் கழக தொ‌ண்ட‌ர்களு‌க்கு ஆதரவாக காவ‌ல்துறை செ‌ய‌ல்படுவதாக கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய அவ‌ர்க‌ள், சாலை ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இதனா‌ல் அ‌ப்பகு‌தி‌யி‌ல் போ‌க்குவர‌த்து பா‌தி‌க்க‌‌ப்ப‌ட்டது.

ஒரு ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌ம் மேலாக ம‌றிய‌ல் ‌நீடி‌த்ததா‌ல் அ‌ங்கு காவ‌ல்துறை‌யின‌ர் அ‌திகளவு கு‌‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். ‌பி‌ன்ன‌ர் கரா‌த்தே ‌தியாகராஜ‌ன் தலைமை‌யி‌ல் அ‌ண்ணாசாலை நோ‌க்‌கி ஊ‌ர்வலமாக செ‌ன்ற கா‌ங்‌‌கிர‌சா‌ரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து வாகன‌த்‌தி‌ல் ஏ‌ற்‌றின‌‌ர். ‌பி‌ன்ன‌ர் அனைவரு‌ம் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இதற்கிடையே உருவ பொம்மை எரித்த பெரியார் திர‌ா‌விட‌ர் கழக‌த்தை சே‌ர்‌ந்த 75 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தன‌ர். அவர்களை நியூ கல்லூரி எதிரில் உள்ள சமூக கூடத்தில் வைக்கப்பட்டு மாலை‌யி‌ல் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இத‌‌‌னிடையே கா‌ங்‌‌கிரசா‌ர் நட‌த்‌திய போரா‌ட்ட‌த்‌தி‌ன் போது ‌திருமாவளவனை கைது செ‌ய்ய வேண்டு‌ம் எ‌ன்று முழக்க‌‌ங்க‌ள் எழு‌ப்‌பின‌ர். இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்த ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த 20‌க்கு‌ம் ‌மே‌ற்ப‌ட்டோ‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌ன் மு‌ன்பு ம‌‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர். அ‌ப்போது, கா‌ங்‌கிர‌ஸ் அலுவலக‌த்தில் இரு‌ந்து வெ‌ளியே வ‌ந்த ராஜ‌ன், வெ‌ங்கடேச‌ன் ஆ‌கிய ‌நி‌ர்வா‌கிக‌ள் வெ‌ளியே ‌வ‌ந்தன‌ர். அவ‌ர்க‌‌ளிட‌ம் ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யின‌ர் கடு‌ம் வா‌க்குவாத‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர். ‌பி‌ன்ன‌ர் இது மோதலாக மா‌றியது.

அ‌ப்போது ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌‌யின‌ர் ‌சில‌ர் கா‌ங்‌கிர‌சா‌ரை உரு‌ட்டு‌க்க‌ட்டையா‌ல் தா‌க்‌கின‌ர். அ‌ங்‌கிரு‌ந்த கா‌ங்‌கிர‌ஸ் பேன‌ர்களை ‌கி‌‌ழி‌த்து எ‌றி‌ந்தன‌ர். இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்த கா‌வ‌ல்துறை‌யின‌ர் ‌விரைந்து வ‌ந்து ‌விடுதலை ‌சிறு‌த்தை‌யினரை கைது செ‌ய்தன‌ர்.

இ‌ந்த ‌நிக‌ழ்‌வை‌த் தொட‌ர்‌ந்து ச‌‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் கு‌வி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil