மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுவின் பரிந்துரையின் பேரில் சென்னையைச் சேர்ந்த 3 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,50,000 அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த காம்ரூன், பல்லாவரத்தைச் சேர்ந்த ஏ.எச். கலீல்பாஷா, சைதாப்பேட்டையைச் சேர்ந்த க. திருப்பதி ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படவிருக்கிறது.