தி.மு.க. பொதுச் செயலாளரும், நிதியமைச்சருமான அன்பழகனுக்கு இன்று 87 வது பிறந்தநாள் ஆகும்.
இதையொட்டி அவரது வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தார்.
மேலும் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் அன்பழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.