Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ம‌‌றிய‌ல் வேண்டாம்: பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண‌ம்- த‌மிழக அரசு அறிவிப்பு

Advertiesment
ம‌‌றிய‌ல் வேண்டாம்: பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண‌ம்- த‌மிழக அரசு அறிவிப்பு
, வெள்ளி, 19 டிசம்பர் 2008 (14:54 IST)
வெள்ள‌ப் பாதிப்பு குறித்து இதுவரை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லையென்றோ அல்லது நிவாரணத்தொகை வழங்கப்படவில்லையென்றோ பாதிக்கப்பட்டவர்கள் அச்சப்படத் தேவையில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ள த‌மிழக அரசு, வெள்ள நிவாரணம் கோரி சாலை மறியல் போன்ற செயல்களில் ஈடுபடுவது தேவையற்றது எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளது.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்மையில் தமிழகத்தில் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டு, அவ்வாறு நிவாரணப்பணிகளை மேற்கொள்ள தேவையான நிதி மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பெரும்பாலான குடும்பங்கள் நிவாரண உதவியைப் பெற்று பயனடைந்துள்ளனர்.

சென்னையைப் பொறுத்த வரையில், ஏறத்தாழ ஏழரை லட்சம் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டு, அதில் 18.12.2008 வரை பாதிக்கப்பட்ட 3 லட்சத்து 89 ஆயிரத்து 89 குடும்பங்களுக்கு 77 கோடியே 81 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட எஞ்சிய குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகையை வேகமாக வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எடுத்துள்ளார். கூடுதலாகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும், பாதிக்கப்பட்ட எல்லோருக்கும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

ஆகவே, தங்கள் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு குறித்து இதுவரை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லையென்றோ அல்லது நிவாரணத்தொகை வழங்கப்படவில்லையென்றோ பாதிக்கப்பட்டவர்கள் அச்சப்படத் தேவையில்லை. வெள்ள நிவாரணம் கோரி சாலை மறியல் போன்ற செயல்களில் ஈடுபடுவது தேவையற்றது என்றும், அதனால் நிவாரண உதவி வழங்குவது தாமதமாக வாய்ப்புள்ளது என்றும், அரசு தெரிவித்துக் கொள்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil