Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு: தொடரும் கரும்பு விவசாயிகள் போராட்டம்

Advertiesment
ஈரோடு: தொடரும் கரும்பு விவசாயிகள் போராட்டம்
ஈரோடு மாவட்டத்தில் கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சென்னையில் கடந்த மாதம் ஆர்பாட்டம் மற்றும் பேரணியை விவசாயிகள் நடத்தினர். கரும்பு விவசாயிகள் போராட்டம் மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஈரோடு மாவட்டத்தில் தீவிரமாக உள்ளது.

கடந்த வாரம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆலைநிர்வாகம் கரும்பு விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1260 தருவதாக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால் மற்ற ஆலைகள் இந்த விலையை விட குறைவாகத்தான் கொடுப்பது குறிப்பிடதக்கது.
இதனால் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் பெரும்பான்மையினர் தங்கள் கரும்புகளை வெட்டும் பணியை துவங்கினர். ஆனால் சக்தி சர்க்கரை ஆலை பகுதியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அப்பகுதியில் கரும்பு வெட்டும் விவசாயிகளை தடுப்பதோடு, வெட்டிய கரும்பை ஏற்றிவரும் லாரிகளையும் சிலர் சிறை பிடித்து வருகிறார்கள்.

இந்த மாவட்டத்தில் மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் கரும்பு லாரி மற்றும் டிராக்டர்கள் சிறைபிடிக்கப்பட்டன. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே அந்த வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுவித்தனர்.

இதற்கிடையே ஈரோடு தலைமை தபால் நிலையம் எதிரே போராட்டம் நடத்த கரும்பு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil