Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுதாவூர் பிரச்சனையில் உறுதியாக இருக்‌கிறோ‌ம்: வரதராஜன்

Advertiesment
சிறுதாவூர் பிரச்சனையில் உறுதியாக இருக்‌கிறோ‌ம்: வரதராஜன்
சிறுதாவூ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் விசாரணை ஆணைய‌த்த‌ி‌‌னஅறிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர் நோக்கி நிற்கிறது எ‌ன்று‌ம் இப்‌பிரச்சனையில் நா‌ங்க‌ள் உறுதியாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க., அதன் கூட்டாளிகளை தோற்கடிப்பது; காங்கிரஸ், அதன் கூட்டாளிகளை நிராகரிப்பது என்று மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய அளவில் எடுத்த அரசியல் முடிவை தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுத்த முற்பட்டது; அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் மக்களவை தேர்தலை அ.தி.மு.க.வுடன் இணைந்து சந்திப்பது என்று தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.

இதில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய இரு கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளன. இது எங்கள் கட்சிகளுக்கு உள்ள உரிமை என்று அங்கீகரிக்கிற சகிப்புதன்மை தி.மு.க. தலைமைக்கு இல்லாமல் போனது துரதிஷ்டமே.

இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான விமர்சனங்களை, ஏகடியங்களை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். சிறுதாவூர் பிரச்சனையை பாதிக்கப்பட்ட தலித் மக்கள் எங்கள் கட்சியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது, மக்கள் பிரச்சனையில் தலையிடும் எங்களது வழியில் நாங்கள் கடமை ஆற்றினோம்.

முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கக் கடிதம் எழுதினோம். இப்பிரச்சனையில் நீதிபதி சிவ சுப்பிரமணியம் தலைமையில் விசாரணை ஆணைய‌ம் ஒன்றை இன்றைய தமிழக அரசு நியமித்தது. அந்த விசாரணை குழுவின் முன்பாக இந்த ஆண்டு ூன் 16, ூலை 3 ஆகிய 2 நாட்களில் கட்சியின் சார்பாக நானே நேரில் சென்று சாட்சியம் அளித்துள்ளேன். இன்றும் விசாரணை ஆணைய‌த்த‌ி‌‌ன் அறிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர் நோக்கி நிற்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி இப்பிரச்சனையில் உறுதியாக இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி இதுபோன்ற மக்கள் பிரச்சனையில் தொடர்ந்து தலையிட்டு வந்த நேர்வுகள் ஏராளம், ஏராளம். சிறுதாவூர் மட்டும் அல்ல, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றும், வேலையை தமிழக அரசு செய்தால் நல்லது. ஆனால் அரசியல் அணி மாற்றம் குறித்த ஏகடியத்திற்கு மட்டும் சுட்டிக்காட்டி விட்டு சும்மா இருப்பது ஆட்சிக்கு அழகல்ல.

மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் உறவுகளுக்காக அவற்றை கைவிட்டதோ, சந்தர்ப்பவாத நிலை எடுத்து சமரசம் செய்து கொண்டதோ, என்றுமில்லை எ‌ன்று வரதராஜன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil