Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ல் சீமானை கைது செய்யவு‌ம்: தங்கபாலு

Advertiesment
தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ல் சீமானை கைது செய்யவு‌ம்: தங்கபாலு
, வெள்ளி, 19 டிசம்பர் 2008 (09:41 IST)
தேசவிரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இய‌க்குன‌ர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் த‌மிழக அரசு உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று என்று த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் கே.வி.தங்கபாலு கோ‌ரி‌க்கை ‌வி‌டு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ராஜீவ்காந்தி இலங்கை‌த் தமிழர்களை அழிக்க அமைதிப்படையை அனுப்பியதாகக் கூறி இந்திய நாட்டையும், அமைதிப் படையையும் கொச்சைப்படுத்தி பேசுவதும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதும், ராஜீவ்காந்தியின் படுகொலையில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனை தமிழர் தலைவர் என்று புகழ்பாடுவதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல பயங்கரவாதத்தை ஆதரித்து பேசுகிற தேசவிரோத குற்றமும் ஆகும்.

இலங்கையில் தமிழர்கள் சமமான வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதற்காக, அவர்களது மீட்சிக்காக, வாழ்வு மேம்பாட்டிற்காக உரிய நடவடிக்கைகளை உணர்வோடு மேற்கொண்ட ராஜீவ்காந்தி, சிங்கள வெறியரால் தாக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் என்ற வெடிகுண்டு இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட கொடிய நிகழ்ச்சியையும் கொச்சைப்படுத்தி பேசுகிற யாரும் உண்மையான தமிழனாக இருக்க மாட்டார்கள்.

ஈரோட்டில் சினிமா இயக்குநர் சீமானும், அவரோடு சிலரும் பேசிய பேச்சுகள் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் செயலாகவும், சட்டவிரோதமானதும் ஆகும். அவர்கள் பேசி 72 மணி நேரம் ஆனதற்குப் பிறகும் இத்தகைய வன்முறைப் பேச்சுக்களை கேட்டுக் கொண்டு அவர்கள் மீது தமிழக காவ‌ல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? யாரை திருப்திபடுத்துவதற்காக?

இந்த செய்திகள் முதலமைச்சர் கருணாநிதியின் பார்வைக்கு வந்துள்ளதா? அல்லது மறைக்கப்பட்டுள்ளதா? இன்றைக்கு ஒரு காலை நாளிதழில் வெளிவந்த இதுதொடர்பான செய்தியாவது முதலமைச்சருக்கு சொல்லப்பட்டதா?

ஏற்கனவே ராமே‌ஸ்வரம் கூட்டத்தில் ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி ஆகிய தலைவர்களின் படுகொலையை நியாயப்படுத்தி பேசிய இவர்கள் நிபந்தனை ‌பிணை‌யி‌ல் ‌விடுதலை செய்யப்பட்டபோது தமிழக காவ‌ல்துறை சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததைத் தொடர்ந்து இன்றைக்கு அதே பேர்வழிகள் அதேபோன்ற தேசவிரோத பேச்சுக்களை பேசி வருகிறார்கள்.

இவ்வாறு அன்றாடம் காங்கிரஸ் பேரியக்கத்தையும், இந்திய திருநாட்டையும், ராஜீவ்காந்தியையும் கொச்சைப்படுத்தி பேசிவரும் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். ராஜீவ்காந்தியையும், இந்திராகாந்தியையும் அவர்களது வழியில் இன்றைக்கு சோனியாகாந்தியும் தான் இலங்கை‌த் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர்கள்.

இவைகளுக்குப் பிறகும் தேசவிரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சீமான் போன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று கே.‌வி.த‌ங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil