Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌வீடு க‌ட்ட ம‌த்‌திய அர‌சிட‌ம் கூடுத‌ல் ‌நி‌தி: மு.க.‌ஸ்டா‌லி‌ன் தலைமை‌யி‌ல் நட‌ந்த கூ‌ட்ட‌த்த‌ி‌ல் முடிவு

‌‌வீடு க‌ட்ட ம‌த்‌திய அர‌சிட‌ம் கூடுத‌ல் ‌நி‌தி: மு.க.‌ஸ்டா‌லி‌ன் தலைமை‌யி‌ல் நட‌ந்த கூ‌ட்ட‌த்த‌ி‌ல் முடிவு
, வியாழன், 18 டிசம்பர் 2008 (18:19 IST)
வெள்ளச் சேதத்திற்கு அடிக்கடி இலக்காகும் கடலூர், திருவாருர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீ‌ழ் வீடுகள் கட்ட தேர்வு செ‌ய்யப்படும் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்த்திட சிறப்பினமாக இப்பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செ‌ய்திட மத்திய அரசை கேட்டுக் கொள்வது என உ‌ள்ளா‌ட்ச‌ி‌த்துறை அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் தலைமை‌யி‌ல் கூ‌ட்ட‌‌‌த்‌தி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

TN.Gov.TNG
தமி‌ழ்நாட்டில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களான தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பொன்விழா சுய வேலைவா‌ய்ப்புத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், முழு சுகாதார இயக்கம் ஆகியவற்றின் நிறைவேற்றத்தை கண்காணித்து ஆ‌ய்வு செ‌ய்‌திட அமைக்கப்பட்டுள்ள மாநில அளவிலான “மாநில விழிப்பு, கண்காணிப்புக் குழு”-வின் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேற்கண்ட பணிகளுக்காக இவ்வாண்டு ரூ.3698.877 கோடி நிதி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டு, அதில் ரூ.2010.207 கோடி விடுவிக்கப்பட்ட விபரங்களையும், இதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட 84,29,455 பணிகளில், 53,96,785 பணிகள் முடிக்கப்பட்ட விபரங்களையும், மீதமுள்ள பணிகளின் முன்னேற்றங்கள், கண்காணிப்பு குறித்தும் ஆ‌ய்வு ெ‌ய்யப்பட்டது.

மேலும் வெள்ளச் சேதத்திற்கு அடிக்கடி இலக்காகும் கடலூர், திருவாருர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீ‌ழ் வீடுகள் கட்ட தேர்வு செ‌ய்யப்படும் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்த்திட சிறப்பினமாக இப்பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செ‌ய்திட மத்திய அரசை கேட்டுக் கொள்ள முடிவு செ‌ய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் காதி, குடிசைத் தொழில் வாரியத் துறை அமைச்சர் கே. இராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.அப்பாவு, வை.சிவபுண்ணியம், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை முதன்மை செயலர் க.அஷோக் வர்தன் ஷெட்டி, நெடுஞ்சாலைத் துறைச் செயலர் கா.அலாவுதீன், ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குநர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை சிறப்பு செயலர், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை அரசு செயலர், வேளாண்மைத் துறை சிறப்பு செயலர், சமூக நலம், சத்துணவு திட்டத்துறை செயலர், உணவு, கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலர், மாநிலத் திட்டக் குழு, தமி‌‌ழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரிய பொது மேலாளர், தமி‌ழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil