காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் இன்று தனித்தனியாக குற்றச்சாற்று பதிவு செய்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் மீது குற்றம் சாற்றப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேரும் ஆஜரானார்கள்.
அப்போது இந்த வழக்கில் தனித்தனியாக குற்றச்சாற்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதி, குற்றவாளிகளிடம் தெரிவித்தார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு நீதிபதி கிருஷ்ணராஜா தள்ளி வைத்தார்.