திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கம் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு எடுத்த முடிவின்படி வருகின்ற 9.1.2009 அன்று நடைபெற உள்ள திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ம.முத்துராமலிங்கம் நிறுத்தப்படுகிறார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேர்தல் பணிக்குழுத் தலைவராக கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் பணிக்குழுத்துணை தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
எனவே கட்சியினர் தேர்தல்பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி கட்சியின் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.