தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்ததாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தங்கச்சி மடம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழையும், பாம்பனில் 2 செ.மீ மழையும் பெய்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வட தமிழகத்தின் உட்புற பகுதிகளிலும் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.