தே.மு.தி.க.சார்பில் நான்கு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது என்றும் சம்பந்தப்பட்ட இளைஞர்கள்- மகளிர்கள் சான்றிதழ், ஆவணங்களுடன் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 20.12.2008 அன்று சிவகங்கை மாவட்டத்திலும், 21.12.2008 அன்று தேனி மாவட்டத்திலும், 27.12.2008 அன்று திண்டுக்கல் மாவட்டத்திலும், 28.12.2008 அன்று விருதுநகர் மாவட்டத்திலும் தே.மு.தி.க. சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
அவ்வமயம் தொழில் நிறுவனங்களும் கலந்துகொள்ள உள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட இளைஞர்கள்- மகளிர் படிப்புக்குரிய சான்றுகள், ஆவணங்களுடன் முழு தயாரிப்போடு இந்த நேர்காணலில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கனவே வேலையில் உள்ளவர்கள் இத்தகைய நேர்காணலில் கலந்து கொள்ள கூடாது என்றும், எந்த இடங்களில் வேலைகள் கிடைத்தாலும் அங்குப்போய் சேருவதற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தகுதியைப் பொறுத்தே வேலைகள் கிடைக்கும் என்பதால் எந்த வகையான சிபாரிசுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.