தமிழகத்தில் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைக்கப்படுகிறது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள மல்லிகைப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுர பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 95 சமத்துவபுரங்கள் ஏற்படுத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்றும் நடப்பாண்டு 25 சமத்துவபுரங்களுக்கான டெண்டர் முடிந்து பணிகள் தொடங்கியுள்ளது என்றார்.
8.7 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள இந்த சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டப்படும் என்றும் இதற்கு 2.11 கோடி செலவாகும் என்றார் ஸ்டாலின்.