Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்தி: யானை மிதித்து முதியவர் சாவு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌‌மி

Advertiesment
சத்தி: யானை மிதித்து முதியவர் சாவு
, திங்கள், 15 டிசம்பர் 2008 (12:30 IST)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டுயானை மிதித்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட புது பீர்கடவு பகுதியில் கடந்த சில வாரங்களாகவே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. பீர்கடவு பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் (70) அங்குள்ள வனப்பகுதியில் ஆடுகள் மேய்ப்பது வழக்கம்.

இதேபோல பழனியப்பன் நேற்று மாலை ஆடு மேய்த்து விட்டு வீடு திரும்பியபோது, ஒரு ஆடு காணமல் போனதால், அந்த ஆட்டைத் தேடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்த காட்டுயானை ஒன்று பழனியப்பனை துதிக்கையால் தூக்கி வீசியது.

இதில் பலத்த காயமடைந்த பழனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வனத்துறையினரும், காவல்துறையினரும் விசாரணை நடத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil