Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்பத்தூரில் நாளை அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு

அம்பத்தூரில் நாளை அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு
, ஞாயிறு, 14 டிசம்பர் 2008 (14:53 IST)
மின்வெட்டு, சொ‌த்து வ‌ரி உய‌ர்வை‌க் கண்டித்தஅம்பத்தூரில் நாளை அ.இ.அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறும‌் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது குற‌ி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாழ்வழுத்த மின்சாரத் தைப்பயன்படுத்துவோர், தங்கள் தேவையில் 20 விழுக்காடு அளவுக்கு குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், உயர் அழுத்த மின்சாரத்தைபபயன்படுத்துவோர் தங்கள் தேவையில் 40 விழுக்காடு அளவுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. அரசு அறிவித்ததன் காரணமாக, அம்பத்தூர் நகராட்சியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும், தொழிலாளர் குடும்பங்கள் வறுமையில் வாடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக தொழில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அறிவிப்பினால், அனைத்துப் பொருட்களின் விலைகளும் விஷம் போல் உயர்ந்துள்ளன. அனைத்துத் தரப்பு மக்களும் இரட்டிப்பு சுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். இது போன்ற அசாதாரண சூழ்நிலையில், அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கான சொத்து வரியை 25 விழுக்காடு அளவிற்கும், வணிக வளாகங்களுக்கான வரியை 150 விழுக்காடு அளவிற்கும், தொழிற்சாலைகளுக்கான வரியை 100 விழுக்காடு அளவிற்கும் நகராட்சி நிர்வாகம் உயர்த்தி மக்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கி இருக்கிறது.

அதே சமயத்தில், நகராட்சி நிர்வாகம் அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. மேலும் பாதாள சாக்கடைத்திட்டம் நிறைவேற்றப்படாததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ள தாகவும், அண்மையில் பெய்தகனமழை காரணமாக ஜெ.ஜெ. நகர் கிழக்கு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாகவும், அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதை‌க்கண்டித்து, திருவள்ளூர் மாவட்ட அ.இ.அ‌.‌தி.மு.க. சார்பில், நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், அம்பத்தூர் நகராட்சியில் அமைந்துள்ள உழவர் சந்தை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil