நியாயவிலை கடைகளில் நாளை முதல் ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.35-ல் இருந்து ரூ.30 ஆக குறைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விலைவாசியை கட்டுப்படுத்த செயல்படுத்தப்படும் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் தமிழக அரசால் நியாயவிலை கடைகளில் பாமாயில் தற்போது லிட்டர் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, நிலவி வரும் விலை நிலவரத்தை கருத்தில் கொண்டு, 15.12.2008 முதல் நியாயவிலை கடைகளில் விற்கப்படும் பாமாயில் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைத்து ரூ.30-க்கு விற்பதற்கு தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
எனவே, 15.12.2008 முதல் நியாயவிலை கடைகளில் பாமாயில் லிட்டருக்கு ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.