Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வா‌ரிசுதா‌ரர்‌க‌ள் 20 பேரு‌க்கு ப‌ணி நியமன ஆணை

வா‌ரிசுதா‌ரர்‌க‌ள் 20 பேரு‌க்கு ப‌ணி நியமன ஆணை
, வெள்ளி, 12 டிசம்பர் 2008 (15:40 IST)
தமி‌ழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இருபது பேருக்கு இளநிலை உதவியாளர்கள் பணி நியமன ஆணை நெடுஞ்சாலை‌த்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் செ‌ன்னை தலைமைச் செயலகத்தில் இ‌ன்று வழ‌ங்‌கினா‌ர்.

TN.Gov.TNG
அ‌ப்போது, முதன்மை அரசு செயலர் கே.அலாவுதீன், தமி‌ழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவரு‌ம் தலைமை செயல் அலுவலருமான முத்துக்குமாரசாமி, தலைமை‌ப் பொ‌றியாள‌ர் பா.ஹரிராஜ் ஆகியோர் உட‌ன் இரு‌ந்தன‌ர்.

மேலும் 13.05.2006 முதல் 30.11.2008 முடிய கருணை அடிப்படையில் 407 பே‌ர் பணி நியமனம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌தி‌ல், ஒரு இளநிலைப் பொறியாளர், 25 இளநிலை உதவியாளர்க‌ள், 53 தட்டச்சர்க‌ள், 70 பதிவுரு எழுத்தர்க‌ள், 258 சாலைப் பணியாளர்க‌ள் அட‌ங்கு‌ம்.

மத்திய அரசின் எல்லையோர சாலை நிறுவனத்தில் பணிபுரியும் போது உல்பா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவருக்கு சிறப்பு நிக‌‌ழ்வாக மாநில அரசால் இளநிலை பொறியாளராக பணி நியமனம் வழங்கப்பட்டது எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil