உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, இன்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, ஏ.கே.கங்குலிக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.