ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் சிறுத்தைப் புலி ஒன்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தது.
பவானிசாகர் வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டெருமைகள் சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதி வழியாகவே கூடலூர் மலைப்பகுதியில் இருந்து பவானிசாகர் அணைக்கு மோயாறு பாய்ந்து வருகிறது.
பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த வனத்துறையினர் மோயாறு ஆற்றுப்படுகையில் ரோந்து சென்ற போது, தெங்குமரஹடாவில் சுமார் ஆறு வயது மதிக்கதக்க ஒரு சிறுத்தை இறந்து கிடந்ததைப் பார்த்தனர்.
அந்த சிறுத்தையைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்திய வனத்துறையினர், நோயினால் சிறுத்தை இறந்திருப்பதை கண்டறிந்தனர்.