ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் மீண்டும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த சிறிலங்க கடற்படையினர் தமிழக மீனவர்கள் படகுகளை கண்டதும் வானத்தை நோக்கிச் சுட்டபடி படகை நெருங்கி வந்தனர்.
பின்னர், படகில் ஏறிய அவர்கள் மீனவர்கள் மீது இரும்பு தடி உள்பட ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளையும் அறுத்தனர்.
இதனால் பதற்றமடைந்த மீனவர்கள் உயிருக்குப் பயந்து, மீன்களை பிடித்தும் பிடிக்காத நிலையில் பாதியிலேயே அவசரமாக கரை திரும்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மீன்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.