தென் தமிழகத்தில் பல பகுதிகளிலும், வட தமிழகத்தில் சில பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்ததாக தஞ்சாவூர் மாவட்டம் முடக்கூர், ஒரத்தநாடு, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, கோவை மாவட்டம் சின்னக்காலார், கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், திருவாரூர் மாவட்டம் அதிராம்பட்டிணம், மன்னார்குடி, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை ஆலங்குடி, கரம்பகுடி, தொண்டி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், ஆய்குடி, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஈரோடு மாவட்டம் காங்கேயம், பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், திருவாடனை, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, சிவகிரி, தென்காசி, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், கரூர், பரமத்தி, கடவூர், பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம், திருச்சி மாவட்டம் முசிறி, மதுரை மாவட்டம் சிட்டாம்பட்டி, மேலூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ மழை பெய்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகத்திலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.