இலங்கை வாழ் இந்து தமிழர்கள் வெற்றி பெற வேண்டி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார் என்று பாரதீய பார்வர்ட் பிளாக் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாரதீய பார்வர்ட் பிளாக் செய்தித் தொடர்பாளர் ஜெகதீஷ் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சென்னை சேத்துப்பட்டு சங்கராலயத்தில் சந்தித்து இலங்கை வாழ் இந்து தமிழர்கள் வெற்றி பெற வேண்டி ஆசி பெற்றார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையில் தமிழர்களின் வழிபாட்டுத்தலங்கள் 2 ஆயிரம் கோயில்கள் சிதைக்கப்பட்ட விபரங்களை சிவாஜிலிங்கம் அப்போது தெரிவித்தார்.
மேலும் தான் டெல்லிக்கு சென்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, பாரதீய பார்வர்ட் பிளாக் தலைவர் நகைமுகன் உடன் இருந்தார் என்று கூறியுள்ளார்.