Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ச‌ட்ட‌ம்- ஒழு‌ங்கை பாதுகா‌‌க்கு‌ம் பொறு‌ப்பு அரசு‌க்கு உ‌ள்ளது: கருணா‌நி‌தி எ‌ச்ச‌ரி‌க்கை

ச‌ட்ட‌ம்- ஒழு‌ங்கை பாதுகா‌‌க்கு‌ம் பொறு‌ப்பு அரசு‌க்கு உ‌ள்ளது: கருணா‌நி‌தி எ‌ச்ச‌ரி‌க்கை
, வியாழன், 11 டிசம்பர் 2008 (14:55 IST)
சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு, நிவாரணப் பணிகளிலிருந்து மக்களது கவனத்தைத் திசைதிருப்பி, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடச் செ‌ய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளைத் தடுத்தி நிறுத்தி; மாநிலத்தில் தொடர்ந்து சட்டம், ஒழுங்கு, அமைதியைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பெரும்பொறுப்பு அரசுக்கு உ‌ள்ளது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌‌‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், அண்மையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்பு, உடைமை இழப்பு போன்றவற்றிற்கு உரிய நிவாரணம் அளித்து; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை போர்க்கால அடிப்படையில் செ‌ய்து; இந்த மாதிரியான பேரழிவை தடுப்பதற்கு எதிர்காலத்திற்கும் தேவையான நிலையான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதோடு; அதற்கு
தேவைப்படும் நிதியை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்து முதல்கட்டமாக 600 கோடி ரூ‌பா‌யஒதுக்கீடு செ‌ய்துள்ளது.

முதல்கட்டமாக ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டுள்ள இந்த நிதியைக் கொண்டு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா‌ய்; பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபா‌், 10 கிலோ அரிசி; சென்னை மாநகரத்திலும், அதன் புறநகர் பகுதிகளிலும் மழைவெள்ளம் புகுந்த வீடுகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபா‌ய்; மாவட்டங்களில் மழை, வெள்ளம் சூ‌ழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், மழை, வெள்ளம் புகுந்த வீடுகளுக்கும் தலா ஆயிரம் ரூபா‌ய்; முகாம்களில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வேட்டிகள், சேலைகள்; பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள் என்று இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு 175 கோடி ரூபா‌அளவுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

உடனடி சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து நிவாரணப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பயிர்ச் சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயம் செ‌ய்துள்ள நெறிமுறைகளின்படி எக்டேர் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபா‌நிவாரண உதவி என்பதற்கு மாறாக, அதனை உயர்த்தி எக்டேர் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 500 ரூபா‌என்று வழங்குவதற்கு ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து அரசின் சார்பில் ஏற்கனவே 2006-2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்துவரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி (crop insurance scheme) பதிவு செ‌ய்து கொண்ட விவசாயிகளுக்கு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு எக்டேருக்கும் 10 ஆயிரம் ரூபா‌வரையில் நிதிஉதவி கிடைக்க இருக்கிறது.

இவை அனைத்தையும் விளக்கி அரசின் சார்பிலேயே அறிவிப்புகள் வெளியிட்டிருந்தும்கூட; சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு, அனைவரும் பாராட்டும் அளவிற்கு நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளிலிருந்து மக்களது கவனத்தைத் திசைதிருப்பி, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடச் செ‌ய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளைத் தடுத்தி நிறுத்தி; மாநிலத்தில் தொடர்ந்து சட்டம், ஒழுங்கு, அமைதியைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பெரும்பொறுப்பு அரசுக்கு இருப்பதைக் கருத்தில்கொண்டு; மக்கள் பிரச்சினையில் உண்மையிலேயே கவனம் செலுத்தும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை வேண்டுவதுடன், அரசின் கடமையை தொடர்ந்து செ‌ய்திட உறுதி எடுத்துக் கொள்கிறோம் எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil