மூதறிஞர் ராஜாஜியின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மூதறிஞர் ராஜாஜியின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பாரிமுனை, உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மின்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.