Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை ராணுவத் தளபதியை பத‌வி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம்: ஜெகத்ரட்சகன் வ‌லியுறு‌த்த‌ல்

இலங்கை ராணுவத் தளபதியை பத‌வி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம்: ஜெகத்ரட்சகன் வ‌லியுறு‌த்த‌ல்
, புதன், 10 டிசம்பர் 2008 (11:12 IST)
இலங்கை ராணுவத் துணைதளபதியின் பேச்சுக்கு இ‌ந்‌தியா கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌ப்பதுட‌ன், ராணுவத் தளபதியை உடனே பதவி நீக்கம் செய்ய நிர்பந்திக்க வேண்டும் எ‌ன்று ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகனவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தீவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை ஒழித்துக் கட்டும் முயற்சியில் சிங்களர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதையும், தமிழ்நாட்டு மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை செய்ய முடியாமல் இலங்கை ராணுவத்தின் கெடுபிடிகளுக்கு இரையாவதையும் தடுத்து நிறுத்தும் எண்ணத்தோடு, இந்திய பிரதமரை, முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையிலே சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரினோம்.

அதை கொச்சைப்படுத்தும் விதத்தில் இலங்கை ராணுவத்தின் துணைத் தளபதி பிதற்றியிருப்பதை ஜனநாயக முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

ஜனாதிபதி இருக்க ஒரு தளபதி பேசியிருப்பது அங்கே ஒருவேளை ஜனநாயகம் மறைந்து, ராணுவ சர்வாதிகாரம் மேலோங்க ஆரம்பித்துவிட்டதோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.

இலங்கை அரசுக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் ராணுவத் தளபதியை உடனே பதவி நீக்கம் செய்ய நிர்பந்திக்க வேண்டும் எ‌ன்று ஜெக‌த்ர‌ட்சக‌ன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil