சென்னையில் உரிமம் பெற்றுத் துப்பாக்கி வைத்துள்ளவர்கள் வருகிற 31 ஆம் தேதிக்குள் உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று மாநகரக் காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்துச் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் துப்பாக்கி உரிமம் பெற்று அதனை பயன் படுத்துபவர்கள், வருகிற 31-ஆம் தேதிக்குள் அதனை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதற்காக எழும்பூரில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
காலாவதியான உரிமத்தை புதுப்பிக்காமல் வைத்திருப்பவர்களின் துப்பாக்கி உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.