அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்திலும், வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான நாகப்பட்டிணம், திருவையாறு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகத்திலும், வடதமிழகமான நாகப்பட்டிணம், திருவையாறு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கைக்கு நகர்ந்து சென்றதைத் தொடர்ந்து தென் தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது.
அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்ததாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, தொண்டி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, கழுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டம் அம்சாமுத்திரம், தூத்துக்குடி, தேவக்கோட்டை, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளது.