Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழை‌க்கு ப‌லி : நிவாரண‌ம் ரூ.2 ல‌ட்சமாக உய‌ர்வு- கருணா‌நி‌தி அற‌ி‌‌வி‌ப்பு!

மழை‌க்கு ப‌லி : நிவாரண‌ம் ரூ.2 ல‌ட்சமாக உய‌ர்வு- கருணா‌நி‌தி அற‌ி‌‌வி‌ப்பு!
, ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (16:54 IST)
த‌மிழக‌த்‌தி‌லஅ‌ண்மை‌யி‌லபெய‌மழை, வெ‌ள்ள‌த்தா‌லஉய‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளகுடு‌ம்ப‌த்து‌க்கவழ‌ங்க‌ப்படு‌ம் ‌நிவாரஉத‌வி ூ.1 ல‌ட்ச‌த்‌தி‌லஇரு‌ந்தூ.2 ல‌‌ட்சமாஉய‌ர்‌த்த‌ப்ப‌டு‌வதாமுத‌ல‌வ‌ரகருணா‌நி‌தி அற‌ி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
வெ‌ள்ள‌ ‌நிவாரண‌பப‌ணிகளமே‌ற்கொ‌‌ள்ளவு‌ம், அதகு‌றி‌த்தஆலோ‌சி‌த்தசெய‌ல்படுவத‌ற்காகவு‌மவெ‌ள்ள‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்ட 12 மாவ‌ட்ஆ‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌‌ளகூ‌ட்ட‌மதலைமசெயலக‌த்‌தி‌லமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி தலைமை‌யி‌லஇ‌ன்றநட‌ந்தது.

இ‌ந்ஆலோசனை‌ககூ‌ட்ட‌த்‌‌தி‌‌ல் பே‌சிமுத‌ல்வ‌ரகருணா‌‌நி‌தி, "புயல், பெருமழை காரணமாக உயிரிழந்த ஒவ்வொரு குடும்பங்களுக்கும்; கால்நடைகளை இழந்தோர்க்கும் நிவாரண உதவியை உடனடியாக அதாவது இப்போது நாங்கள் நிர்ணயித்த 10-12-2008க்குள் வழங்கி முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பெருமழை காரணமாக உயிரிழந்தோருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் வழங்குவதென்று அறிவித்திருக்கிறோம். அது போதுமானதல்ல என்று எதிர்க்கட்சிகளின் சார்பில், பொதுவான சில கட்சிகளின் சார்பில் குரல் இன்றைக்கு ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

எனவே, இந்தக் கூட்டத்தில் எடுக்கின்ற முடிவாக அந்தத் தொகையஇறந்தோர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை என்பதை 2 லட்ச ரூபாய் என்று உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கின்றேன்.

கால்நடை இழப்புக்கு நிவாரண உதவி வழங்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியரிடமிருந்து கோட்ட வருவாய் அலுவலர்களுக்கு மாற்றிக் கொடுக்க இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெ‌ள்‌ள‌த்ததா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கநிதி உதவிகளை 15-12-2008க்குள் வழங்கி முடித்திட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் சேதம் பற்றிய கணக்கெடுப்பை நடத்தி முடித்திடவும், அவற்றிற்கு நிவாரண நிதி உதவி வழங்கிடவும், 31-12-2008க்குள் முடித்திட அதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உடைமைகள் முழுவதையும் இழந்து விட்ட குடும்பங்களுக்கு அந்தக்குடும்பங்களிலே எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை பேருக்கும் தலா ஒரு வேட்டி, ஒரு சேலை என்ற முறையில் வழங்க வேண்டும். பொங்கல் நேரத்திலே வழங்குவது என்பது ஒரு புறம் இருந்தாலுங்கூட, இந்தப் பாதிப்பை ஈடுகட்ட அவர்களுக்கு இந்த இலவச வேட்டி சேலைகளை உடனடியாக நாளைக்கே தொடங்கி வழங்கிட வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆறுகள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றில் தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர்களே மேற்பார்வையிட்டு தரத்தை உறுதி செய்திட வேண்டும்.

இன்றையதினம் மாலையிலே டெல்லியிலிருந்து வெள்ளப்பாதிப்புகளையும், நிவாரணப்பணிகளையும் பார்வையிட மத்திய குழு வருகிறது. அந்தக் குழு வருகிற நேரத்தில் அவர்கள் பார்ப்பதற்காக மாத்திரமல்ல, பாதிக்கப்பட்ட மக்கள் கண்டு, ஆறுதல் அடைவதற்காக நம்முடைய ஒவ்வொரு மாவட்டத்திலுமஅதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னின்றும், எல்லா அதி காரிகளையும் வயல்களிலஎந்தெந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த இடங்களில், ஆற்றுப் பகுதிகளில், வாய்க்கால் பகுதிகளில், சாலையோரங்களில் அங்கெல்லாம் நின்று பணியாற்ற வேண்டும் எ‌ன்று‌ அ‌திகா‌ரிகளு‌க்கமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil