Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்தி வனப்பகுதியில் யானை பலி

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Advertiesment
சத்தி வனப்பகுதியில் யானை பலி
, சனி, 6 டிசம்பர் 2008 (11:26 IST)
சத்தியமங்கலம் வனப்பகுதியில் நோய் தாக்கி ஆண் யானை இறந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வன சரகத்திற்குட்பட்டது கடம்பூர் வனப்பகுதி. இங்கு காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வசிக்கின்றது. இங்குள்ள தொட்டமகுடு என்ற இடத்தில் ஒரு ஆண்யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி எஸ்.இராமசுப்பிரமணியம், ரேஞ்சர் எம்.எஸ்.மணி, வனத்துறை மருத்துவர் மனோகரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று இறந்த யானையை பரிசோதித்தனர்.

பிரேத பரிசோதனையில் இறந்த ஆண்யானைக்கு 17 வயது இருக்கும். கால், வாயில் ஏற்பட்ட நோயினால் அந்த யானை இறந்தது என தெரியவந்தது.

Share this Story:

Follow Webdunia tamil