Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ன்று பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு ‌தின‌ம்: ர‌யி‌ல் ‌நிலைய‌‌‌ங்க‌ளி‌ல் பல‌த்த பாதுகா‌ப்பு

இ‌ன்று பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு ‌தின‌ம்: ர‌யி‌ல் ‌நிலைய‌‌‌ங்க‌ளி‌ல் பல‌த்த பாதுகா‌ப்பு
, சனி, 6 டிசம்பர் 2008 (11:03 IST)
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்புக்கு கமாண்டோ அதிரடிப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் வழ‌க்க‌த்து‌க்கு மாறாக பாதுகா‌ப்பு பல‌‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கடந்த 1992 டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்‌ப‌ட்டது. ஆண்டுதோறும் இந்த நாளில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. மும்பையில் பய‌ங்கரவா‌திக‌ள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ரயில்களில் பார்சல் அனுப்புவது 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்களில் காவ‌ல்துறை‌யி‌‌‌ல் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், தனியார் மருத்துவமனைகள், சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையங்களில் பய‌ங்கரவா‌திக‌ள் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. அந்த இடங்களில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மட்டும் 600‌க்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட காவல‌‌ர்க‌‌ள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்சி, மதுரை, சேலம், கோவை உட்பட முக்கிய ரயில் நிலையங்களிலும் காவல‌ர்க‌ள் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் 30 நிமிடத்துக்கு முன்னதாக வரும்படி ரயில்வே அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவ‌ல்துறை கூடுதல் தலைமை இய‌க்குன‌ர் ராஜேந்திரன் கூறுகை‌யி‌ல், இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே, 8ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னையில் போட்டி நடக்கிறது. அந்த அணிகளின் வீரர்கள் சென்னையில் தங்கி உள்ளனர். இவர்களுக்கும் பய‌ங்கரவா‌‌திக‌‌ள் அச்சுறுத்தல் உள்ளதால், மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விமான நிலையத்துக்கு மட்டும் 7 கம்பெனி அதிரடிப் படை‌‌யின‌ர் கொடுக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு கமாண்டோ படை, அதிரடிப் படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவிகள், மோப்ப நாய்களுடன் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோவைக்கு சிறப்பு அதிரடிப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மதுரைக்கு 2 கம்பெனி காவல‌ர்க‌ள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே துறைக்கும் 2 கம்பெனி அதிரடிப் படையினர், 10 கமாண்டோக்கள், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் தனிப்படையினர், மோப்ப நாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எ‌‌ன்றா‌ர் ராஜேந்திரன்.

Share this Story:

Follow Webdunia tamil