முன்னான் அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நெகமம் கந்தசாமி இன்று காலமானார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெகமத்தை சேர்ந்தவர் நெகமம் கந்தசாமி (83). கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நெகமம் கந்தசாமி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று நெகமம் கந்தசாமி மரணம் அடைந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான நெகமத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அ.இ.அ.தி.மு.க. சார்பில் 1977, 1982, 1987 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தனர் நெகமம் கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது.