வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் காரத் இன்று சந்தித்து பேசினார்.
இன்று பகல் 12.30 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு பிரகாஷ் கரத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் என்.வரதராஜன், மத்திய குழு உறுப்பினர் கே.வரதராஜன் ஆகியோர் சென்றனர்.
அப்போது, பிரகாஷ் காரத் ஜெயலலிதாவுக்கு பூச்செண்டு கொடுத்தார். இதையடுத்து அவர்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது.
ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் பரதன், தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.