சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் அத்துடன் 30 கிலோ அரிசி, 10 லிட்டர் மண்எண்ணெய் ஆகியவற்றையும் பாரபட்சம் இல்லாமல் வழங்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.