பாராளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 10ஆம் தேதி முதல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உள்பட்ட 40 பாராளுமன்ற மக்களவை தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்கள், வரும் 10ஆம் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 27ஆம் தேதி அன்று மாலை வரை, தலைமைக் கழகத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி அதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.