கோவை மாவட்டம் தெலுங்குப்பாளையத்தில் சாயபட்டறையில் இருந்து கழிவுகளை கால்வாயில் விட்ட 40 சாயபட்டறைகளை மூட தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சாயபட்டறைகளில் இருந்து வரும் கழிவு நீர் தண்ணீரில் கலக்கப்படுவதாக விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வி.பழனிகுமார் விசாரணை நடத்தும் படி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
அவர்கள் நடத்திய விசாரணையில் சுத்திகரிக்கப்படாமல் சாய கழிவுகளை கால்வாயில் விடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 40 சாயபட்டறைகளை மூடவும், அங்குள்ள மின்சாரத்தை துண்டிக்கவும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.