Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் பிரபுதேவா மகன் மரணம்

Advertiesment
நடிகர் பிரபுதேவா மகன் மரணம்
, வியாழன், 4 டிசம்பர் 2008 (11:29 IST)
பிரபல த‌மி‌ழ் நடிகரு‌ம், இய‌க்குனருமான ‌பிரபுதே‌வி‌ன் ம‌க‌ன் உட‌ல் நல‌க்குறைவா‌ல் இ‌ன்று காலை மரண‌ம் அடை‌ந்தா‌ர்.

நடன இய‌க்குனராக இரு‌ந்து நடிகர், இயக்குனரானவர் பிரபுதேவா. இவ‌ர் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷால் (13), ரிஷி, ராகவேந்திரா, ஆதித்தேவா என 4 மகன்கள்.

கட‌ந்த ‌சில மாத‌ங்களாக விஷா‌ல் உடல் நலக் குறைவா‌ல் செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஷால் மரணம் அடைந்தார்.

விஷால் உடல் செ‌ன்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு‌ள்ளது. நடிகர்கள், இய‌க்குன‌ர்க‌ள் உ‌ள்பட பல‌ர் அஞ்சலி செலுத்தின‌ர்.

விஷால் உடல் இன்று மாலை பெசன்ட் நகரில் தகன‌ம் செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil