Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போர் நிறுத்தம்தான் திருப்தி : கருணாநிதி!

போர் நிறுத்தம்தான் திருப்தி : கருணாநிதி!
, புதன், 3 டிசம்பர் 2008 (22:44 IST)
இலங்கையில் மொத்தமாக போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் திருப்தி எ‌ன்று‌ம் இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தலைவலி மருந்து போலஉள்ளது எ‌ன்று‌‌ம் முத‌ல்வ‌ர் கருணாந‌ி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இலங்கை‌ததமிழர்களபிரச்சனைக்கு ‌நிர‌ந்தர தீர்வகாவேண்டும், அங்கபோரநிறுத்தமஉடனடியாஅமல்படுத்தப்பவேண்டுமம‌த்‌திஅரசவ‌லியுறு‌த்த‌க் கோ‌ரி ‌பிரதம‌‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை ச‌ந்‌தி‌ப்பத‌ற்காக த‌மிழக அனை‌த்து‌க்க‌ட்‌சி தலைவ‌ர்க‌ளுட‌ன் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌‌தி ‌விமான‌மமூல‌ம் இ‌ன்று டெ‌ல்‌லி வ‌ந்தா‌ர்.

பி‌ன்ன‌ர், விமான நிலையத்தில் இருந்து டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள தமிழ்நாடு புதிய இல்லத்திற்கு வந்த முத‌ல்வ‌ர் கருணாநிதி அங்கு செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பேட‌்டிய‌ளி‌த்தா‌ர்.

இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா எ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு ப‌‌தி‌ல் அ‌ளி‌த்த அவ‌ர், "இலங்கையில் மொத்தமாக போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் திருப்தி. இதுவரை மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தலைவலி மருந்து போல் உள்ளது" எ‌ன்றா‌ர்.

இலங்கை பிரச்சனையில் மத்திய அரசுக்கு 2 வார கால கெடு அறிவித்தும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. திரும்ப பெறலாமே எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, "மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?" எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil