Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா

மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா
, செவ்வாய், 2 டிசம்பர் 2008 (17:25 IST)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மண்டலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்கள், மரணமடைந்த தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வு கால பணப்பலன்களை உடனடியாக வழ‌ங்க‌க் கோ‌ரி அ.இ.அ.‌தி.மு.க. சா‌‌‌ர்‌பி‌ல் நாளை மதுரை‌யி‌ல் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச்செயலர் ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி 1.6.2006 முதல் இன்று வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும், மரணமடைந்த தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஓய்வு காலப்பணப்பலன்கள் சுமார் 90 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக சுமார் 3,000 தொழிலாளர்கள் கடன் சுமையால் ஆற்றொணாத்துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு இருப்பதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மண்டலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்கள், மரணமடைந்த தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வு கால பணப்பலன்களை வழங்காதது, போக்குவரத்துக்கழகங்களில் 240 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாதது, போக்குவரத்துக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காணாதது உள்ளிட்ட போக்கு கண்டனத்துக்குரியது.

தொழிலாளர்களது மேற்படி அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், அ.இ.அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், நாளை (3ஆ‌ம் தேதி) பிற்பகல் 2 மணி அளவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மதுரை மண்டல அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil