Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அருந்ததியினர் இடஒதுக்கீடு : பூட்டா சிங்கை சந்தித்தா‌ர் டி.ஆர். பாலு!

Advertiesment
அருந்ததியினர் இடஒதுக்கீடு : பூட்டா சிங்கை சந்தித்தா‌ர் டி.ஆர். பாலு!
, செவ்வாய், 2 டிசம்பர் 2008 (16:01 IST)
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியினர் இனத்தவருக்கு சிறப்பு ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் பூட்டா சிங்கை சந்தித்துப் பேசினார்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிவுறுத்தலின்படி ‌பூ‌ட்டா ‌சி‌ங்கை ச‌ந்‌தி‌த்த டி.ஆ‌ர். பாலு, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியின மக்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு தரும் கோரிக்கை நீண்ட நாளாக எழுப்பப்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படும் 18 ‌விழு‌க்காடு இடஒதுக்கீட்டில் அருந்ததியின மக்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அளிக்கும் வாய்ப்புகளை ஆராய்வதற்காக தனிநபர் குழு அமைக்கப்பட்டதாக எடு‌த்து‌க் கூ‌றினா‌ர்.

நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கட‌ந்த மாதம் 22ஆம் தேதியன்று தனது அறிக்கையை தமிழக அரசிடம் அளித்தது. இதில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 18 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் 3 ‌விழு‌க்கா‌ட்டை அருந்ததியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய பரிந்துரைத்தது.

அருந்ததியினர், சக்கிலியர், மாதாரி, ஆதிஆந்திரர், பகடை, மடிகா, தோட்டி ஆகிய 7 இனத்தவரும் அருந்ததியின மக்களில் அடங்குவர். இவர்களுக்கு "முன்னுரிமை அடிப்படையில்" 3 ‌விழு‌க்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று குழு பரிந்துரை செய்தது.

இதன் அடிப்படையில் தமிழக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 338(9)-ன்படி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் கருத்துக்களை கேட்டுள்ளதாக அமை‌ச்ச‌ர் பாலு அவரிடம் தெரிவித்தார்.

தனிநபர் குழுவின் பரிந்துரைகள் குறித்த தமது கருத்துக்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் தெரிவிக்க வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்குள் அருந்ததியினர் இன மக்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அளிக்க பரிசீலித்து வரும் தமிழக அரசுக்கு உதவ வேண்டும் என்றும் அமை‌ச்ச‌ர் பாலு பூட்டா சிங்கிடம் கேட்டுக் கொண்டார்.

முன்னுரிமை அடிப்படையில் இந்த விஷயத்தை ஆணையம் விரைந்து பரிசீலித்து தமிழக அரசுக்கு நல்ல முடிவைத் தெரிவிக்கும் என்று பூட்டா சிங், டி.ஆ‌ர். பாலுவிடம் உறுதி அளித்தார்.

மத்திய மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கொள்கை முடிவுகளை எடுக்கும் போது தேசிய தாழ்த்தப்பட்ட நல ஆணையத்தை கலந்தாய்வு செய்வது அவசியம் எ‌ன்பது குற‌ி‌ப்‌பிட‌த்த‌க்கது.


Share this Story:

Follow Webdunia tamil