புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ப. சிதம்பரம் இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க போராடுவார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிதம்பரம் ஏற்கனவே உள்துறை இணை அமைச்சராக பணியாற்றியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார். தற்போது அவர் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க சிதம்பரம் போராடுவார் என்று கூறினார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் இன்று நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் குறித்து பதில் அளித்த அவர், தமிழகத்தில் அமைதியை பாதுகாக்க கூட்டப்படும் வழக்கமான மாதாந்திர கூட்டம்தான் இது என்றும் இன்றைய கூட்டம் அது போன்ற மற்றொரு ஆலோசனைக் கூட்டம்தான் என்றும் கருணாநிதி கூறினார்.