அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பெய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, வால்பாறை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 4 செ.மீ மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, திருவண்ணாமலை, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சத்தியமங்கலம், நீலகிரி மாவட்டம் கிட்டி, குந்தாபாலம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, உத்திரமேரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, செம்பரம்பாக்கம், புதுச்சேரி விமான நிலையம், தஞ்சாவூர் மாவட்டம் கொடவாசல், திருநெல்வேலி மாவட்டம் ஆய்குடி, நாங்குனேரி, பாளையங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, குளித்துறை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், போளூர், சாத்தனூர் அணை, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கோவை மாவட்டம் ஏற்காடு, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், ஈரோடு மாவட்டம் தாராபுரம், கோபிசெட்டிபாளையம், தேனி மாவட்டம் பெரியகுளம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.