Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்தை ‌‌விரை‌ந்து முடி‌க்க கோ‌ரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா

கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்தை ‌‌விரை‌ந்து முடி‌க்க கோ‌ரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
, திங்கள், 1 டிசம்பர் 2008 (16:40 IST)
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்காமல் தாமதப்படுத்தும் தி.ு.க அரசைக் கண்டித்தும், பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், கரூர் மாவட்ட அ.இ.அ.ி.ு.க சார்பில் நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச்செயலர் ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoWD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஊரக, நகரப்பகுதிகளில் பல்வேறு குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொள்வதில் தி.ு.க அரசு மெத்தனமாக நடந்து கொள்வது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

கரூர் மாவட்டம், கடவூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களைச் சார்ந்த 269 ஊரகக் குடியிருப்புகளுக்கும், திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 272 ஊரகக் குடியிருப்புகளுக்கும் நீண்ட காலமாக உள்ள குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க ஏதுவாக 28 குடிநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டப்பட்டு, 182 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் சுமார் இரண்டு லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 49 கோடி ரூபாய் மதிப்பிலான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் எனது ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்டன.

எனது ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட திட்டம் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மேற்படி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை தி.ு.க அரசு விரைந்து முடிக்காமல் கடந்த 30 மாத காலமாக தாமதப்படுத்தி வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தி.ு.க அரசு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.

எனவே, கரூர் மாவட்டம், கடவூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியப் பகுதிகளைச் சார்ந்த மக்களின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்காமல் தாமதப்படுத்தும் தி.ு.க அரசைக் கண்டித்தும், பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், கரூர் மாவட்ட அ.இ.அ.ி.ு.க சார்பில் நாளை காலை 10 மணி அளவில் கடவூர் ஒன்றியம், தரகம்பட்டி பேருந்து முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மக்கள் நலனை முன் வைத்து நடைபெறவுள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று ஜெயல‌லிதா கேட்டுக்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil